PUBLISHED ON : ஜூன் 18, 2017

அ நிறம் | அளவு
மனிதநேயம் என்ன செய்கிறது
மனிதநேயமே
நம் செயல்பாடுகளை
நல் வழிப்படுத்துகிறது!
மனிதநேயமே
நம் துன்பங்களை
மறக்கச் செய்கிறது!
மனிதநேயமே
நம் போராட்டங்களை
நிறுத்தி வைக்கிறது!
மனிதநேயமே
நம் தவறுகளை
மன்னிக்கச் செய்கிறது!
மனிதநேயமே
நம் கனவுகளை
நனவாக்கச் செய்கிறது!
மனிதநேயமே
நம் எண்ணங்களை
மேன்மைப்படுத்துகிறது!
மனிதநேயமே
நம் வன்முறைகளுக்கு
சமாதி கட்டுகிறது!
மனிதநேயமே
பிரிந்த உள்ளங்களை
ஒன்று சேர்க்கிறது!
மனிதநேயமே
மனித வாதங்களுக்கு
மங்களம் பாடுகிறது!
மனிதநேயமே
வாடிய பயிரை கண்டு
வாடும்படி செய்கிறது!
மனிதநேயமே
இன்னா செய்தாருக்கும்
இனியவை செய்கிறது!
மனிதநேயமே
இறுதிப் பயணத்தை
புனிதப் பயணமாக்கிறது!
— பூ.சுப்ரமணியன்,
சென்னை.
