PUBLISHED ON : ஜூன் 25, 2017

அ நிறம் | அளவு
சினம் கொள் மனிதா!
சினம் கொள்ளாதே
என்கிறார்கள்...
எப்படி இருப்பது சினம் கொள்ளாமல்!
நல்லன விடுத்து
அல்லனவே செய்யும்
பொல்லாதோர் மீது
சினம் கொள்ளக்கூடாதா?
மனிதநேயம் மறந்து
உயிர் வதை செய்யும்
கொலைகாரர் மீது
சினம் கொள்ளலாகாதா?
அடிப்படை தேவைகள் கூட
கிட்டாமல் பலர் வாட
இரக்கமற்று வாழ்வோரிடம்
சினம் கொள்ளக்கூடாதா?
பாதகம் செய்வோரை கண்டு
பயம் கொள்ளாமல்
மோதி மிதித்து, முகத்திலுமிழ
சினம் கொள்ளலாகாதா?
முற்றும் துறந்திட்ட
முனிவர்களும் கூட
சட்டென பொறுமை மீறி
சினம் கொள்வதுண்டு!
சுயநலத்திற்காக
சினம் கொள்வதை விடுத்து
பொதுநலம் விரும்பி
சினம் கொள் மனிதா!
—வ.முருகன், பாப்பனப்பட்டு, விழுப்புரம்
