தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதா....

வாழ்க்கையில்

துரோகிகளை தூரத்திலும்

பகையாளியை பக்கத்திலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

செலவை சற்று தூரத்திலும்

வரவை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

பலவீனத்தை சற்றுத் தொலைவிலும்

பலத்தை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

கசப்பை சற்றுத் தொலைவிலும்

இனிப்பை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

லட்சத்தை சற்று தொலைவிலும்

லட்சியத்தை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

சுயநலத்தை சற்றுத் தொலைவிலும்

பொதுநலத்தை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

ஆண்மையை சற்றுத் தொலைவிலும்

பெண்மையை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

காமத்தை சறறுத் தொலைவிலும்

காதலை சற்று அருகிலும்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவாய்!

வாழ்க்கையில்

மாதா பிதா குரு தெய்வம்

இந்நான்கையும் அருகில்

வைத்துப்பார்

காப்பாற்றப்படுவோம்!

- கோ.சந்திரன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us