
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓலம்!
கட்டி அணைக்க
வளையல் கொஞ்சும்
கைகளுண்டு!
முடிந்தவரை
முத்தம் கொடுத்து
இம்சிக்க இதழுண்டு!
கடித்து மகிழ
கன்னமோ
ரெண்டுண்டு!
இழுத்து மகிழ
கருங்கூந்தல்
நீண்டுண்டு!
காட்டுவதை
வாங்கி தர
கைகாசு பலமுண்டு!
ஈரம் செய்தாலும்
மாற்றுத்துணி
பட்டுண்டு!
சுரண்டி விட
கிறுக்கித் தள்ள
வீட்டில் வெட்டிசுவர்
பலவுண்டு!
படுத்துறங்க ஆளின்றி
தவிக்கும் மடியைப்போல்
காற்று வாங்கும்
கருவறை தானுண்டு!
பலருக்கு,
'வசவச ' ன்னு கிடைத்திருக்க...
காதோரம் வறுத்தெடுத்த
வார்த்தைகளால் வதங்கி
நடைபிணமான எனக்கு
கிடைக்க வரமுண்டா...
ஒண்ணே ஒண்ணு!
வேணிமகள், சென்னை

