PUBLISHED ON : அக் 29, 2017

அ நிறம் | அளவு
கல்லாய் போ...
கர்ப்ப கிரகத்தில் அமர்ந்து
வேண்டுவோருக்கு
வரம் அளிக்கிறது
ஒரு கல்!
கோவில் சுவருக்கு
சுற்றுக்கல்லாய் நின்று
கடவுளைக் காக்கிறது
இன்னொரு கல்!
நடுக்கல்லாய் நின்று
வீரத்தைப் போற்றுகிறது
வேறொரு கல்!
நெருப்பு பொறியை
கண்டறிய உதவியதும்
கற்கள்தான்!
இரும்பு காலத்திற்கு முன்
இருந்த ஆயுதங்களும்
கற்களே!
வாழ்ந்த காலங்களின்
வரலாற்றை
கற்கள் தான் சொல்கின்றன!
பிறகெதற்கு கவலைப்பட்டு
கண்ணீர் உகுத்து நின்றாய்
அகலிகை...
'கல்லாய் போ' என்று
உன் கணவன் சபித்ததற்கு!
இ.எஸ்.லலிதாமதி,
சென்னை.
