
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருந்தால் கொடுங்கள்!
அம்மாக்களே...
மனதைப் புண்படுத்தாமல்
அனைவரையும் அரவணைக்க
திகட்டாத அன்பைக் கொடுங்கள்!
அப்பாக்களே...
நல்ல மனிதத்துடன்
தரணி போற்ற வாழ
உயர்ந்த பண்பைக் கொடுங்கள்!
ஆசிரியர்களே...
உலகை ஜெயித்து
தாய்நாட்டின் பேர் காக்க
அறிவுடன் அடக்கத்தைக் கொடுங்கள்!
உறவினர்களே...
மகிழ்ச்சி, துக்கம்
எல்லாவற்றிலும் உடனிருக்க
அகலாத நம்பிக்கையைக் கொடுங்கள்!
நண்பர்களே...
வாழ்வின் எல்லாவற்றையும்
காலம் கடந்து பேச
பசுமையான நினைவைக் கொடுங்கள்!
— மருதாணி, சென்னை

