PUBLISHED ON : மே 06, 2018

அ நிறம் | அளவு
அறிவியல்....
அருமையாக
அழகாக இருக்கின்றன
வளர்ந்த மேலை நாடுகள்!
சுத்தம், சுகாதாரம்
சட்ட திட்டம்
நிர்வாகம், ஒழுங்கு
நாகரிகம், பண்பாடு...
குழந்தை வளர்ப்பு
மனித நேயம்
மருத்துவம்
அறிவியல் வளர்ச்சி...
கல்வி, வேலை வாய்ப்பு
நவீன வேளாண்மை
அனைத்தும்
ஆச்சரியப்பட வைக்கின்றன!
குப்பை கூளங்கள்
கிடையாது...
சாலைகளில் விதிமீறல்கள்
இல்லை!
மின் தடை கிடையாது
உணவு, தண்ணீர் பஞ்சம்
எதுவும் இல்லை!
கட்டுப்பாடில்லா சுதந்திரம்...
ஆடல், பாடல்
ஆண் - பெண் பேதம்
அறவே கிடையாது!
இத்தனை இருந்தும்
ஏன் திரும்பி வந்தீர்கள்
என்று கேட்கின்றனர்
நண்பர்கள்!
எப்படி சொல்வது...
அங்கு, பயந்து பயந்து
வாழ வேண்டியதை...
குழந்தைகள் கூட
துப்பாக்கி பிடிக்கின்றனரே!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
