PUBLISHED ON : மே 20, 2018

அ நிறம் | அளவு
கற்றுக்கொள்!
நாணல்கள்...
கற்றுக் கொடுக்கிறது
வளைந்து கொடுக்க!
காகங்கள்...
கற்றுக் கொடுக்கிறது
ஒற்றுமையாக இருக்க!
எறும்புகள்...
கற்றுக் கொடுக்கிறது
சேமிப்பின் சிறப்பை!
தேனீக்கள்...
கற்றுக் கொடுக்கிறது
சுறுசுறுப்பின் சூட்சுமத்தை!
ஆமைகள்
கற்றுக் கொடுக்கிறது
விடா முயற்சியை!
ஐந்தறிவு
ஜீவன்கள் கூட
நல்லவைகளை மட்டுமே
கற்றுக் கொடுக்கின்றன...
ஆனால்
ஆறறிவு இருந்தும்
மனிதா நீ மட்டும்
எப்படி கெட்டவைகளை
மட்டும் கற்றுக் கொண்டாய்?
— வே.விநாயகமூர்த்தி,
சென்னை.
