PUBLISHED ON : ஆக 19, 2018

அ நிறம் | அளவு
கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!
வார்த்தையில்
சுத்தம் இருக்கும் வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
உத்தமர்கள்
உலகத்தில் இருக்கும் வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
நம்பிக்கை
நமக்குள் இருக்கும் வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
மனிதநேயம்
மண்ணுலகில் இருக்கும் வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
மரணம் நம்மை
நெருங்காத வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
இழப்பு என்றொன்று
இல்லாத வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
மனிதன்
மனிதனாக வாழும் வரை
கவலைப்படுவதற்கு
ஒன்றுமில்லை!
—மணியட்டி மூர்த்தி, கோவை.
