PUBLISHED ON : ஆக 26, 2018

அ நிறம் | அளவு
மனம் மலரட்டும்!
முள்ளாகவே இருந்தாலும்
முன்னேறு உன் பாதையில்
முதலடி மட்டுமே வலிக்கும்!
மூடியதே வாசல் என
மூச்சடைத்துப் போகாதே
முயன்றால் முன் விரியும்
மற்றுமொரு வாசல்!
தோல்வியே தொடர்ந்தாலும்
துாசியாய் தகர்த்தெறி
துகளிலும் தெரியலாம்
புது ஒளியின் துளி!
துன்பமே வந்தாலும்
துவளாமல் நிமிர்ந்து விடு
துணிந்தால் தொட்டு விடலாம்
வெற்றியின் நுனி!
சிதறும் மழை தான்
மண்ணுக்கு வளம் சேர்க்கும்
சிறு புல்லும் பெரும்புயலை
வளைந்து தாங்கும்!
சிதறாத மனம் தான்
சிகரம் கொண்டு சேர்க்கும்!
நல்ல எண்ணங்களை
நாற்றாய் நட்டு நீராய்
நம்பிக்கையை ஊற்று!
நாளும் நல்ல விடியல் எனும்
நல்லெண்ண உரமிடு
நறுமலர் தோட்டமாய் மனம்
மலர, நுகர்ந்து மகிழ்ந்திடு!
அன்னை போல அன்பு செய்
அழகாய் விரியும் சிறகு
தேவையின்றி, ஆனந்தமாய்
மனம் பறப்பதை பார்!
காந்திமதி சுப்ரமணியன், மதுரை.
