தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உணவே மருந்து - ஹெல்த் டிப்ஸ்!

உணவே மருந்து - ஹெல்த் டிப்ஸ்!

உணவே மருந்து - ஹெல்த் டிப்ஸ்!


PUBLISHED ON : ஆக 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதயக்கோளாறு...

இதயத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, சுண்டைக்காய் சாப்பிடுங்கள்; எலுமிச்சை அல்லது நாரத்தை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் இதய நோய் வராது.

திராட்சை, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, சீத்தா, ஆரஞ்சு மற்றும் நாவல் பழம் ஆகியவை இதயத்தின் நண்பர்கள்.

கறிவேப்பிலை, நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவு எடுத்து, வறுத்து, பொடித்து மோரில் கலந்து சாப்பிட்டால், இதய பலவீனம் சரியாகும். நெல்லி தயிர் பச்சடி, மணத்தக்காளி கீரை சாப்பிட்டால், குடல் புண் சரியாகும். கோவைக்காய் இதயத்திற்கு பலம் கூட்டும்.

இதயக்கோளாறு உள்ளோர், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, காராமணி, கொண்டைக்கடலை ஆகியவற்றை தவிர்க்கவும்.

ரத்த அழுத்தம் குறைய...

உலர் திராட்சையை ஊற வைத்து, அந்த தண்ணீருடன் பசும் பால் கலந்து சாப்பிட ரத்த அழுத்தத்துடன், ஜனன உறுப்புகளின் அழுக்குகளும் வெளியேறுவதோடு, கல் அடைப்பு இருந்தாலும் சரியாகும். நெல்லி வற்றல், சந்தனம், திராட்சை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் லேசாக சூடுபடுத்தி வடிகட்டி சாப்பிடுவதன் மூலமும், நெல்லிக்காய், திராட்சை, சீத்தா பழம், நாவல், ஆரஞ்சு, நாரத்தை சாப்பிட்டாலோ, ரத்த அழுத்தம் வராது.

மேலும், ரத்த அழுத்தம் உள்ளோர், உருளைக்கிழங்கு, இஞ்சி, சீரகம், பெருங்காயம், முள்ளங்கி, புளிச்ச கீரை, சுண்டை வற்றல், மாங்காய், மாவடு ஆகியவற்றை தவிர்க்கவும்; உப்பு, வெல்லம் குறைவாக சாப்பிடவும்.

நீரிழிவு பிரச்னை தீர...

பீர்க்கை, புடலை, பாகற்காய், அவரை, கோவைக்காய், நுால்கோல், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, வெங்காயம், முருங்கை, சுரைக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை சாப்பிட்டால் நீரிழிவு நோய் பிரச்னையிலிருந்து தப்பலாம்.

அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றை கொஞ்சமாகவும், கொய்யா, மலை வாழை பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது.

கருணைக்கிழங்கு தவிர, மற்ற எல்லா வகை கிழங்குகள், பீட்ரூட், சீத்தாபழம், திராட்சை ஆகியவற்றை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவும்.

எலும்பு பலம் பெற...

கறிவேப்பிலை துவையல், முருங்கை கீரை சூப், பாகற்காய், பொட்டுக்கடலை, வெல்லம், எள்ளுப்பொடி, பருப்பு பொடி சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலுப்பெறும்.

தனியா, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்தெடுத்து, உப்பு, பெருங்காயத் துாள் சேர்த்து மிக்சியில் பொடித்து, சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.

தேங்காய், மாங்காய் சுண்டல், அன்னாசி பழம், பிரண்டை துவையல் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும்.

கொத்தவரங்காய், கோவைக்காய், அவரை, பீன்ஸ் போன்ற கொடி வகை காய்களை, எலும்பு பலவீன பிரச்னை உள்ளோர் தவிர்க்கவும்.

ஆஸ்துமா பிரச்னை தீர...

ஓமம் - 100 கிராம், திப்பிலி - 50 கிராம், வறுத்து, பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் வெளியேறும். நாள்பட்ட இருமல், மூச்சிரைப்பு சரியாகும்.

கத்தரிக்காய், கொத்தவரங்காய், நுால்கோல், பாகற்காய், உருளைக்கிழங்கு, முருங்கை, முட்டைக்கோஸ், கொஞ்சம் கேரட் இவற்றை சமைத்து, வெது வெதுப்பான சூட்டில் சாப்பிடலாம்.

ஆப்பிள், பூவன் பழம், மலை வாழைப் பழம் கொஞ்சம் சாப்பிடவும். கொய்யா பழத்துடன் கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்னைக்கு நல்லது.

அஸ்துமா பிரச்னை உள்ளோர், குளிர்ச்சியை துாண்டும் வெள்ளரி, சுரைக்காய், பூசணி மற்றும் பீட்ரூட் போன்ற நீர்க்காய்களை தவிர்க்கவும். திராட்சை மற்றும் நேந்திரம் பழம் சாப்பிடக் கூடாது.

சிறுநீரக பிரச்னை உள்ளோர் கவனிக்க வேண்டியது...

வாழைப்பூ, வாழைத் தண்டு, பீர்க்கை, சுரைக்காய், பூசணி, சவ்சவ் போன்ற நீர் காய்களை அதிகம் சாப்பிடுங்கள்; அவரை, தட்டைப் பயிறு, பச்சை பயிறு, துவரை வகைகள், காசினி கீரை சாப்பிட்டால் கிட்னி பிரச்னை வராது. பழங்கள் அனைத்தும் சாப்பிடலாம்.

பட்டை, சோம்பு, கரம் மசாலா மற்றும் மீல் மேக்கர் ஆகியவற்றை தவிர்க்கவும்.

தாம்பத்ய உறவு மேம்பட...

கொய்யா பழம், கொய்யா இலை சாறு சாப்பிட்டால் ஆண்மை குறைவு சரியாகும். மாதுளை, செவ்வாழை, நேந்திரம், தேனில் ஊறிய நெல்லிக்காய், கசகசா, வால்மிளகு, வாதுமை பருப்பு, கற்கண்டு சம

அளவு எடுத்து இடித்து, தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட, விந்து விருத்தியாகும். பலாப் பழம் ஆண்மையை அதிகரிக்கும்; அஜீரணம் சரியாகும்.

வாழைக்காய் பொரியல், பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, புடலங்காய், பச்சை பயறு, சத்து மாவு கஞ்சி சாப்பிட்டால் பெண்களுக்கு தாம்பத்ய உறவு மேம்படும்.

வாழைப்பூ, கொத்தவரங்காய், கத்தரிக்காய், காலிபிளவர், முட்டைகோஸ், சிறு கீரை மற்றும் வத்தல் குழம்பு, மீல் மேக்கர் மற்றும் மோர் போன்றவற்றை தாம்பத்யத்தினர் தவிர்க்கவும்.

நரம்பு பலவீனத்திற்கு...

கோதுமை உணவுகள், சோயா, பச்சை பயறை வேக வைத்து, வெங்காயம், பூண்டு சேர்த்து சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நரம்பு பலவீன பிரச்னை வராது.

கேழ்வரகு, மக்காச்சோளம், நவதானிய கஞ்சி நரம்பை முறுக்கேற்றும்; பருப்பு உசிலி சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு உள்ளோர், ஆரோரூட் கஞ்சி சாப்பிட்டால் சரியாகும்; நரம்புகளுக்கு வலு சேர்க்கும்.

புடலை, அவரை, பீர்க்கன், பூசணி மற்றும் குளிர்ச்சி தரும் சீத்தா பழம், கொய்யா, சாத்துக்குடி பழம் தவிர்க்கவும்.

புற்றுநோய்க்கு...

எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறிகள், பப்பாளி, மாதுளை, ஆப்பிள் (தோல் நீக்கி), நெல்லிக்காய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு நல்லது.

பெப்டிக் அல்சர், வயிறு தொந்தரவு, கேன்சர் உள்ளோர், பச்சை பயறு - 2 டம்ளர், அரிசி - 1 டம்ளர், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து ஊற வைத்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, தோசை செய்து, அவியல், வெண்ணெய் வைத்து சாப்பிடவும்.

உரம் போட்டு வளர்க்கும் காய்கறிகளை தவிர்க்கவும்; இயற்கையாய் விளையும் காய்கறி, பழங்கள் சாப்பிட்டால், கேன்சர் வராது.

மாதவிடாய் பிரச்னையிலிருந்து விடுபட...

வெந்தயம் முக்கால் பங்கு, சர்க்கரை கால் பங்கு கலந்து பொடித்து சாப்பிட மாதவிடாய் வலி போகும்.

மாதவிடாய் வருமுன், கசகசாவை பாலில் அரைத்து சாப்பிட்டால் வலி ஏற்படாது.

சுரைக்காய் அல்வா, பீட்ரூட், பேரீச்சை, தேன் நெல்லி, திராட்சை, பொட்டுக்கடலை சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுக்கு நல்லது.

கொத்தவரங்காய், கத்தரிக்காய், இஞ்சி, பட்டை, சோம்பு, பெருங்காயம் தவிர்க்கவும்; பப்பாளி சாப்பிடக் கூடாது.

- எஸ். ராஜசுந்தரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us