
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதற்காக?
கனவுகள் தான் சுகம் என்றால்
காட்சிகள் எதற்காக...
வாழ்க்கை தான் நலம் என்றால்
மரணம் எதற்காக...
மவுனம் தான் சிறந்ததெனில்
மொழி எதற்காக...
தேடுதல் வேண்டுமெனில்
திருப்தி எதற்காக...
உறங்குவது தான் அமைதி எனில்
விழிப்பது எதற்காக...
அறிவு தான் பெரிதென்றால்
செல்வம் எதற்காக...
உறவு தான் உரம் என்றால்
பிரிவு எதற்காக...
அன்பு தான் நிஜம் என்றால்
கோபம் எதற்காக...
ஒளி தான் உண்மையெனில்
இருள் எதற்காக...
வாலிபம் தான் வாழ்க்கை என்றால்
முதுமை எதற்காக...
எளிமை தான் மேன்மையெனில்
வளமை எதற்காக...
காதலே மேன்மை என்றால்
காமம் எதற்காக...
ஏனெனென்றால்
ஒன்றினால் தான் மற்றொன்று
ஒன்றில் தான் மற்றொன்று
ஒளிந்திருக்கிறது
அதற்காக, அதற்காக, அதற்காக!
தேவவிரதன், சென்னை.

