
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனும் தெய்வமாகிறான்!
மனிதன்
தெய்வமாகலாம்...
அவன்
வாழ்வை துறக்கும் போதல்ல...
வாழ்வை உணரும்போது!
தன் துன்பங்களை
தாங்கிக் கொள்ளும்போதல்ல
பிறர் துன்பங்களை
துடைக்கும்போது!
கையில்
ஆயுதங்கள் இல்லாத போதல்ல...
கோபம் என்னும் ஆயுதத்தை
கையாளாத போது!
பணத்தை
பதுக்கும்போதல்ல...
பணத்தை
பகிர்ந்தளிக்கும் போது!
பிறரை பற்றி
பேசாத போது மட்டுமல்ல...
பிறரின் இழி சொல்லுக்கு
செவி மடுக்காத போதும் தான்!
மனிதன்
தெய்வமாகிறான்...
அவன் வாழ்வு,
அவனுக்கும், பிறருக்கும்
பயன்படும்போது!
வாணி, கோவை.

