
பொங்கட்டும் பொங்கல்!
தைத் திங்கள் முதல் நாள்
பொங்கல் திருநாள் - தமிழர்
பொங்கலிட்டு மகிழ்ந்திடும்
தமிழர் திருநாள்!
நன்னாளாம் இந்நாளில்
இயன்றதை இல்லார்க்கு
இன்முகத்துடன் தந்திடுவோம்!
புத்தாடை உடுத்திடுவோம்
புதுப் பானையில் புத்தரிசி இட்டு
பொங்கல் வைத்திடுவோம்!
உலகிற்கு ஒளி தந்து
உய்விக்கும் கதிருக்கு
பொங்கலிட்டு வணங்கிடுவோம்...
'பொங்கலோ பொங்கல்...' என்று
உற்சாகமாய் முழங்கிடுவோம்!
உழவர் வாழ்வு மேம்பட
அவர் உள்ளமெல்லாம் களிப்புற
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
வறுமை ஒழிந்திட
வளம் பெருகிட
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
மழை பொழிந்திட
வீடும் நாடும் செழித்திட
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
வேற்றுமை விலகிட
ஒற்றுமை பூத்திட
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
அறம் செழித்திட
அமைதி நிலைத்திட
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
செங்கரும்பின் சுவை போல
வாழ்வென்றும் இனிதாக
பொங்கட்டும் பொங்கல் - எங்கும்
தங்கட்டும் இன்பம்!
பொங்கட்டும் பொங்கல்
புவி எங்கெங்கும்
நிறையட்டும் இன்பம்!
நெப்போலியன், சென்னை.

