
வாழ்க்கையின் பாடம்!
நான் இதுவரை அறிந்த
வாழ்க்கையின் பாடம்
இது தான்...
வாழ்க்கை என்பது, நடந்து கொண்டே
இருப்பது தான்; இந்த பயணத்தில்
ஒரு இடத்தை அடைந்தால் நல்லது;
அடையாவிட்டாலும் நல்லது!
பயணம் தான் முக்கியம்,
எங்கு செல்கிறோம் என்பது அல்ல
எல்லா தடங்கல்களையும் துாக்கி எறிந்து
தைரியமாக நட!
உன்னை எதிர்ப்பவர்களை கண்டு கலங்காதே
மாறும் காலங்களையும், மக்களை பற்றியும்
கவலைப்படாதே!
நீ நடந்தால், பலரும் உன்னுடன் நடப்பர்
நீ உயர்ந்தால், பலரும் உயர்வர்
நீ மாறினால், பலரும் மாறுவர்
உன்னுடைய சூழ்நிலையும் மாறும்!
நீ புதிய அனுபவங்களை சந்திப்பாய்
அதையும் உன்னுடன் சேர்த்து நட ...
உன்னை வழி நடத்திட
புதிய விதிமுறைகள் வரும்
அதற்கு இடம் கொடு
தைரியமாக இரு!
உன்னுடைய சுக துக்கங்களை,
கனவோடு சேர்த்து நட ...
உன் நெஞ்சில், வீரத்தின் தீயை ஏற்றி
அதனுடன் நீ நட ...
நீ நடக்க வேண்டும்,
நடந்து கொண்டே இருக்க வேண்டும்!
- ச.ரங்கராஜன், சென்னை.