PUBLISHED ON : ஜூலை 21, 2019

அ நிறம் | அளவு
நாங்கள் தமிழர்கள்!
மழையோ, வெயிலோ
'தலைவர் வாழ்க' என கோஷமிட்டு
மணிக்கணக்கில் சாலையில் நிற்போம்!
கோஷமிட்டு வந்த காசை
'டாஸ்மாக்'கில் அரசுக்கே
அர்ப்பணிப்போம்!
வானுயர, 'கட் - அவுட்'
செய்து வாங்கி வந்து
பாலாபிஷேகம் செய்வோம்!
எவனோ கிரிக்கெட் விளையாட
பொன்னான பொழுதையெல்லாம்
விசிலடித்தே கழித்திடுவோம்!
அபிமான நடிகனுக்கு
உடல்நலம் சரியில்லை எனில்
அலகு குத்தி, தீ மிதித்து
வேண்டுதலை நிறைவேற்றுவோம்!
கட்டடத்து வேலையெல்லாம்
கஷ்டமென்று ஒதுக்கி விட்டோம்
உணவகத்து வேலையெல்லாம்
எவன் செய்தால் நமக்கென்னவென்று
நாசுக்காய் நகர்ந்து கொண்டோம்!
போட்டி தேர்வுகளுக்கு
படிப்பதை விட்டு விட்டு
போராட்ட களத்தில்
புகுந்து விட்டோம்!
வட மாநிலக்காரன்
வந்து விட்டான்
அய்யகோ...
அடித்துக் கொள்வோம்
வடக்கு வாழ்கிறதாம்
தெற்கு தேய்கிறதாம்!
எம்.செல்வகுமார், திருச்சி.
