PUBLISHED ON : செப் 29, 2019

அ நிறம் | அளவு
முடிவும் வருமோ
தினமும் ஒரு காயம்
அதுவும் மனக்காயம்
ஆறுதல் சொல்ல
வழியில்லை!
தினமும்
ஒவ்வொரு நிகழ்வு
மனம் விட்டு பேச
நேரமில்லை!
தினமும் ஒரு இழப்பு
பகிர்ந்து கொள்ள
மனமில்லை
வேக ஓட்டம்
பணத் தேடல்!
உழைப்பு என்பதை
கமிஷன் என்ற
பேய் பிடித்தாட்ட...
சோம்பேறியாய் காலம்
வியர்வை சிந்தாமல்
உடல் நோயால்
நோகும் நேரம்!
விட்டுக் கொடுத்து
தட்டிக் கொடுத்து
அதட்டிக் கொடுத்து
காரியம் நடந்ததொரு
காலம்...
வாய் பேச்சு, பேரம்,
வாக்குவாதம், சுதந்திரம்
தன்மானம் பார்வையில்
நடைமுறையில் மட்டும்!
ஏக்கமும், தாகமும்
கானல் நீராய்
சுயநலம் மண்டி
புதராய் கிடக்க...
மனிதாபிமானம், மனிதநேயம்
சுருண்டு ஓரத்தில் கிடக்க
நகரும்
நரக வாழ்க்கை...
மனச்சுமை, மன அழுத்தமே
பிரதான ஓட்டம்
என்று தணியும்
இந்த வேட்கை
மனித போலி போர்வை?
ஆர். சீதாராமன், சீர்காழி.
