
உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
கீழடி
கொடுத்த ஒரே அடியில்,
மொகஞ்சதாரோ
ஹரப்பாவின் கர்வங்கள் இப்போது
மண்ணில் புதைந்து போனது!
நதியின் கரையில்
நாகரிகம் வளர்ந்தது
என்று வரலாறு சொன்னாலும்
அதற்கு, தொட்டில் கட்டியது
தமிழனுடைய
கீழடி!
இந்தியாவின் உச்சி கிளையான
சிந்து சமவெளி முதல்
கடைக்கோடி கீழடி வரை
தமிழ் வேர் பரவி
இருக்க...
நான் தான் பழமை என்று
சில மொழி காளான்களின்
கூச்சல், இனி, மண்ணோடு
மண்ணாகட்டும்!
புதைந்த தங்கத்தில்
'தக தக'க்கிறது
பழந்தமிழர் நாகரிகம்!
கிடைத்த
மண் பாண்டங்களில்
சமைக்கப்பட்ட
தமிழன் பண்பாடு
இன்னும் கெடாமல்
இருக்கிறது!
கி.மு., - கி.பி., என்பது
இனி,
த.மு., - தமிழனுக்கு முன்
த.பி., - தமிழகனுக்கு பின்
என்று மாறட்டும்!
விலை உயர்ந்த தந்தங்களில்
ஆபரணங்களை செய்து
ஆதி தமிழன்
பயன்படுத்தி இருக்கிறான் என்று
கீழடி சொல்கிறது...
ஆனால், இன்றோ,
ஆங்கில முலாம் பூசப்பட்டு
ஏனோ கவரிங் நகையாக
மாறிக்கொண்டு வருகிறான்!
எது எப்படியோ,
கீழடி
அகழ்வாராய்ச்சியில் அழியாமல்
எழுதப்பட்டு விட்டது...
தமிழன் தான்
உலக புத்தகத்தின் முதல் அடி என்று!
ந. வீரா, திமிரி