
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகம்...
விண்ணில்
செவ்வாய் கிரகத்தை
வலம் வருகிறான்
மனிதன்!
மண்ணில்
பல்லாயிரம் அடி
ஆழத்தில் எரி வாயு
எடுக்கிறான் மனிதன்!
காற்றிலிருந்து
கணினி அலைபேசிக்கு
இணைப்பளிக்கிறான்
மனிதன்!
சூரிய சக்தியிலிருந்து
மின்சாரம் எடுத்து
உலகுக்கு ஒளி தருகிறான்
மனிதன்!
ஒளி - ஒலி வேகத்தை விட
அதிக வேகத்தில்
பயணிக்கும் விமானத்தை
கண்டுபிடிக்கிறான் மனிதன்!
கடலுக்குள் சாலை போட்டு
பாலம் கட்டி
அதிசயிக்க வைக்கிறான்
மனிதன்!
நொடிப் பொழுதில் உலகை
அழிக்கும் ஆயுதங்களை
வைத்திருக்கிறான்
மனிதன்!
இத்தனை அறிவியல்
வளர்ச்சி காணும்
இன்றைய
மனிதனின் நிலை
பரிதாபமாக இருக்கிறது...
வைரஸ் நோய்க்கு பயந்து
தன் முகம் மறைத்து
முகமூடி அணிகிறான்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.