
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனித்திரு... தவித்திரு...
கனத்த மனதும்
காலி வயிறுமாய்
காலாற நடக்கிறான்
புலம்பெயர் தொழிலாளி!
பூக்கள் அழகாய்
பூத்துக் குலுங்கியும்
வாடிப் போகிறது
பூக்காரர் முகம்!
இஸ்திரி போட
வஸ்திரம் இன்றி
சுருங்கிப் போகிறது
சலவையாளி வயிறு!
காற்று வாங்க
யாரும் வராமல்
காற்று வாங்குகின்றன
கடற்கரைகள்!
நிவர்த்தி வேண்டி
பக்தர்கள் இன்றி
நிற்கதியாய் நிற்கின்றன
தெய்வங்கள்!
தனித்திருக்க
சொல்கிறது அரசு
தவித்திருக்கின்றனர்
மனிதர்கள்!
— கே.வி.கே.பெருமாள், புதுடில்லி.

