
ஓட்டு!
என் மதம் என ஒரு ஓட்டு
என் ஜாதி என ஒரு ஓட்டு
என் கட்சி என ஒரு ஓட்டு!
என் எதிரிக்கு எதிரி என ஒரு ஓட்டு
என் கூட்டணி என ஒரு ஓட்டு
என் பங்காளி என ஒரு ஓட்டு!
ஆசை வாக்குறுதிகளை நம்பி ஒரு ஓட்டு
அதிகம் கொடுத்ததால் ஒரு ஓட்டு
இவராவது செய்வாரா
எனும் எதிர்பார்ப்பில் ஒரு ஓட்டு!
யாருக்காவது போடுவோம் என ஒரு ஓட்டு
யாருக்குமே வேண்டாம் என ஒரு ஓட்டு!
- இப்படி
எண்ணி எண்ணி வாக்களித்தவர்களே...
சிந்தித்து செயல்படுவீர்!
பகல் வேஷம் போடுபவர்களுக்கோ
பசப்பு வார்த்தை பேசுபவர்களுக்கோ
'டோக்கன்' கொடுத்து வளைப்பவர்களுக்கோ
கவரில் வைத்து கொடுப்பவர்களுக்கோ
உங்கள் பொன்னான ஓட்டை விற்றால்
தேர்தலுக்கு பின்...
உங்கள் வீட்டு ஓட்டை பிரித்து,
'கன்னம்' வைத்த தடம் தான் தெரியும்
நீங்கள் ஏமாந்து போன உண்மை புரியும்!
வாக்காள பெருமக்களே...
சிந்தித்து செயல்படுவீர்!
இப்போது சிந்திக்கவில்லையெனில்
இனி வரும் ஐந்தாண்டு
உங்களுக்கானதாக இருக்காது!
எஸ்.ஆர். சாந்தி, மதுரை.

