PUBLISHED ON : ஏப் 18, 2021

அ நிறம் | அளவு
வெற்றிகளை தலையிலேற்றாதே!
வெற்றிகளை
தலையிலேற்றாதே
கனம் தாங்காமல் தவற விடலாம்!
புகழ்ச்சிக்கு அங்கீகாரம்
கொடுக்காதே
எழுத்துகள் பிழன்று
அகங்காரமாகி விடலாம்!
பதவிக்கு அலையாதே
பாசத்தை தொலைத்து
பரிதவிக்கலாம்!
பணத்திற்கு விலை போகாதே
மனசாட்சியிடம் மறையும் வரை
மண்டியிட வேண்டியிருக்கலாம்!
துளையுள்ள மூங்கிலும்
தன் ஊனத்தை
பலமாக்கி காட்டிடவில்லையா!
ஊனமுள்ளவரும்
தன் உழைப்பை நம்பி
வாழ்ந்திடவில்லையா!
கல்வி மட்டுமே நிலையான
நிலை தரும்...
அதில்லையேல்
உழைப்பு ஒன்றே நிரந்தர
உயர்வு தரும்!
மு.கவுந்தி, சென்னை.
