PUBLISHED ON : மே 23, 2021

அ நிறம் | அளவு
அன்பை வளர்ப்போம்!
விட்டில் பூச்சிக்கு தெரியாது
நெருப்பில் இறப்போமென்று!
மீனுக்கு புரியாது
துாண்டிலில் தன் உயிர் பிரியுமென்று!
பூக்களுக்கு தெரியாது
உதிர்ந்து விழுவோமென்று!
நிலவுக்கு தெரியாது
தேய்ந்து வளர்கிறோமென்று!
மெழுகுவர்த்திக்கு தெரியாது
உருகி விடுவோமென்று!
உளிக்கு தெரியாது
கல்லை காயப்படுத்துகிறோமென்று!
குயிலுக்கு தெரியாது
தான் பாடும் பாட்டு இனிமையென்று!
மனிதா...
உன் நாக்குக்கு தெரியாது
அடுத்தவனின் இதயம் ரணமாகுமென்று!
இனிமையாக பேசி
அன்பை வளர்த்தால்
பகைவன் கூட நண்பனாவான்!
த. நேரு, வெண்கரும்பூர்.
