PUBLISHED ON : ஜூலை 18, 2021

காலமென்னும் மருந்து!
கால தேவன் எல்லா
காயங்களுக்கும் மருந்து போடுகிறான்
காயங்களில்லாமல் வலிக்கிற
உள் மனக்காயங்களை தவிர!
கால தேவனின் கட்டுப்பாட்டில்
கவிழ்ந்து போவது வலிகள் மட்டுமின்றி
காலத்தோடு சேர்ந்து மாற்றங்களையும்
அள்ளி விதைக்கிறான் அவனியிலே!
நாவால் சுட்ட வடுக்களுக்கு
வடிகால் படிக்கும் கால தேவன் - ஆறாதெனினும்
மறக்கடிக்க மாய மருந்தொன்றை
மன மஞ்சமதில் துாறலாய் பொழிந்து
விட்டுப் போகிறான் மாய மானாக!
கால தேவனின் கணக்கில்
பல்லாயிரம் நொந்துபோன
ஆன்மாக்கள் மகிழ்ச்சிப் பூக்களை
சூடியிருக்க...
தாடிகளைத் தாண்டி பல நல்ல
உள்ளங்களை சமைத்து
வாழ வைத்திருக்கிறது!
கால தேவன் எல்லா நோய்களுக்கும்
மருந்து தரும்
சர்வ ரோகிணியாய் விரிந்து
படர்ந்து ஆட்சி நடத்திடுகிறது!
கடந்து போகும் நதியின்
நீரைப் போல கடந்துபோகும்
காலம் எனும் காலதேவன்!
ரஜகை நிலவன், மும்பை
