PUBLISHED ON : ஜூலை 25, 2021

அ நிறம் | அளவு
வீழ்ந்து விடுவோமா, எழுந்து வருவோமா?
வேளாண்மை, கல்வி
உடல்நலம், வேலைவாய்ப்பில்
இந்தியா அதீத வளர்ச்சி பெற்று,
2020ல் வல்லரசாகி விடும் - என
1998ல், கனவு கண்டார்
அப்துல் கலாம்!
இன்று இந்தியா சந்திப்பதோ
வேளாண்மைக்கு வெட்டுக்கிளி
கல்வியில் தேர்வெழுதாமல்
அனைவரும் தேர்ச்சி
உடல் நலனில் கொரோனா
விடுகிறது சவால்
வேலைவாய்ப்பில் வீட்டிற்குள்ளேயே
வேலை தேடல்!
துாக்கத்தில் வருவது கனவல்ல
நம்மை துாங்க விடாமல்
செய்வதே கனவு
இன்றோ, 'டிவி'யிலேயே
வெளியுலகை காண்கிறோம்
வெளியுலகிற்கு செல்வோமா
என்பதே கனவாகி வருகிறது!
வெட்டுக்கிளியை விரட்டியடித்து...
நிகழ் நிலையில் கல்வி கற்று...
கபசுர குடிநீரால் கொரோனாவை விரட்டி
உள்ளூரில் கிடைத்த வேலை செய்து
நிச்சயம் எழுந்து வரும் இந்தியா
வீழ்ந்து விடாது, கலாமின் கனவு!
பா. ரஞ்சித்ராணி, விருதுநகர்.
