PUBLISHED ON : ஜூலை 03, 2011

அ நிறம் | அளவு
'நான்' எங்கே?
* அழியா உறவும் நீ
அழியும் உடலும் நீ...
* பிரியா காதலும் நீ
பிரியும் உயிரும் நீ...
* தணியா காமமும் நீ
தணியும் மோகமும் நீ...
* பேசிய வார்த்தை நீ
பேசாத மவுனமும் நீ...
* இமைக்கா நேரம் நீ
இமை மூடும் இரவும் நீ...
* ஆனந்தத்தின் உச்சம் நீ
அழ வைக்கும் அச்சமும் நீ...
* நிகழ்கால உண்மை நீ எதிர்கால பொய்யும் நீ...
* வாழ்வின் கணமும் நீ
முடிவில் மரணமும் நீ...
* இப்படி —
எல்லாம், 'நீ'யான பின்
'நான்' எங்கே... நீயே சொல்!
— கே.விஜயகுமார், கோவை.
