தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தானாக அழியும் என்றிருந்தால்...

நல்லதை நினைப்போம்

நன்மையைச் செய்வோம்

நல்லதே நடக்கும்

நன்மையே கிடைக்கும்!

நட்புகள் வளரட்டும்

உறவுகள் தொடரட்டும்

உண்மைகள் சிறக்கட்டும்

உயர்வுகள் கிடைக்கட்டும்!

அம்மாவும் - அப்பாவும்

கண் கண்ட தெய்வங்கள்

ஆசானும் - குல தெய்வமும்

அருள் தரும் தெய்வங்கள்!

குழந்தைகள் - முதியவர்கள்

நாட்டின் செல்வங்கள்

அரவணைத்துச் செல்வது

அனைவரின் கடமை!

நலமுடன் வாழ்வோம்

வளமுடன் வாழ்வோம்

மனிதநேய உணர்வுள்ள

மனிதராக வாழ்வோம்!

வறியோருக்குத் தேவையான

உதவிகள் செய்வோம்

அவசியமான அனைத்தும்

கிடைக்கச் செய்வோம்!

எங்கே என்ன நடந்தாலும்

உனக்கொரு பிரச்னை வரும் வரை

எனக்கென்ன என்று இருக்காதே

உனக்கு வந்த பின் தவிக்காதே!

லஞ்சம், ஊழல், அராஜகம்

எழுதினால் பட்டியல் நீண்டு விடும்

புரையோடிய சமுதாயக் களைகளை

ஆணி வேரோடு களைய வேண்டாமா?

தானாக அழியும் என்றிருந்தால்

அதற்கு முன்பே நாமழிவோம் - நம்

தலைமுறை வாழ வேண்டாமா

சிந்தித்து செயல்பட வேண்டாமா?

முடியாதென்று எதுவுமில்லை

முடியுமென்று நம்புவோம்

முயற்சிகள் செய்வோம்

முடித்துக் காட்டுவோம்!



- சி. சந்திரமோகன், மதுரை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us