
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக., 7, நண்பர்கள் தினம்
நட்பு!
எந்தப் பூவுக்கும்
இல்லாத வாசம்
இந்தப் பூவுக்கு உண்டு
அது தான் நட்பு!
நட்பெனும் பூவைக்கொண்டு
மாலை தொடு
எந்நாளும் அது வாடாதிருக்கும்!
செடியிலோ
கொடியிலோ மலராமல்
உலகமெங்கும்
செழித்திருக்கும் மலர்
நட்பு!
தோளோடு தோளாய்
பிணைந்திருக்கும் நேசம்
நட்பு!
நகமும் சதையுமாய்
இணைந்திருக்கும் உறவு
நட்பு!
மனிதர்களுக்கு
உறவாய், உயிராய், உணர்வாய்
எப்போதும் இருப்பது தான் நட்பு!
சி.முத்துக்கிருஷ்ணன்,
தென்காசி.