
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்வை மாறினால் போதுமே!
* வருத்தத்தைப் போக்க
வழியா இல்லை...
பிரச்னைகள்
யாருக்கு இல்லை!
* அவை —
நிழலாய் தொடரும்
நிதர்சனம்!
* பயப்படுத்தும்
பல்வேறு விஷயங்களை
பட்டியலிட்டால்...
பிரதான இடத்தைப்
பிடிப்பது பிரச்னை!
* பிரச்னைகள்
வாழ்க்கைக்கு
வருத்தம் தருவனவல்ல...
அர்த்தம் தருவன!
* உப்பு —
ஒரு துளி குறைந்தால் கூட
உணவு சுவைப்பதில்லை...
பிரச்னை இல்லாவிட்டால்
வாழ்வதில்
பெருமை என்ன இருக்கிறது!
* பிரச்னைகளை
பிரச்னைகளாகப் பார்ப்பதை விடுத்து
அவற்றை
சவால்களாய் சந்திப்போம்!
* சவால்களை
யாராவது
பிரச்னைகளாய் நினைப்பரா?
* பயம் —
ஒரு மாயக் கண்ணாடி
அது —
மனதில் இருக்கிறவரை
உண்மை நிலையை
உணர முடியாது!
* பயத்தைத் தூக்கி எறிந்து
பார்வையில்
மாற்றம் நிகழ்த்தினால்...
பார்க்கப்படும் பொருள்
தானே மாறும்!
— பத்மநாபன், காரமடை.