
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னவளே!
* விண்மீனை
நேசிக்கிறேன் - உன்
கண்களில்
ஜொலிப்பதால்...
* வேட்டையாடப்
புறப்பட்டேன் - உன்
புருவங்களையே
வில்லாக
ஏந்திக் கொண்டு...
* காதல் இலக்கணம்
கற்றுக் கொண்டேன் - உன்
தமிழ் பேச்சினில்
கனல் வார்த்தைகள்
கரம் கோர்ப்பதால்...
* முதலில் வந்தது
காற்றா... அசைவா...
இரண்டுமில்லை - உன்
கண்ணசைவால்
இரண்டும் தோற்று
சாதனை படைத்தது...
* சில நேரங்களில்
நேசத்தின் எல்லைகளை
காண முடிகிறது - உன்
விரல்கள் பத்தும்
தொட்டுத் தாலாட்டுவதால்...
* உலகை
வலம் வந்தது
நிலவு...
வெளிச்சமில்லை - உன்
பொன்னிற மேனி
கலங்கரை விளக்காய்
என்னைச் சுற்றுவதால்...
* எது எப்படியோ -
உன்னைச் சுற்றி வரும்
என்னை
திசை மாறி
செல்ல விடாதே!
— போஸ் குமார், சென்னை.