sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 25, 2011

Google News

PUBLISHED ON : செப் 25, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீ என் லட்சியம்...

* யாசகன் போல

கையேந்தி நிற்கிறேன்...

அதற்காகவேனும் என்னை சம்மதி!

* புரியாத தரை நிலவாய்

வீசத் தெரியாத தென்றலாய்

பூக்களுக்கு இடம் கொடாத பூமியாய்

நீ வலம் வருகையில்

விக்கித்து அழுகிறேன்...

உன் மீதான அன்பை

தாங்க முடியாமல்...

* என் பிரியத்தை இறக்கி வைக்க

பரந்து விரிந்த ஒரு உள்ளம் தேவை

கண்ட இதயத்திலெல்லாம் போட்டு வைக்க

என் காதல் ஒன்றும்

சூப்பி எறியப்பட்ட பனங்கொட்டையல்ல!

* உடல் முழுக்க நாணம் சுமந்து

பார்த்தும் பாராமல்

நீ போகும் ஒவ்வொரு நிமிடமும்

வேர்த்து விறு விறுத்து

சித்தமே கலங்கிப் போகிறதெனக்கு!

* உனக்கு வேண்டுமானால்

நிராகரித்தல் என்பது

சட்டை பொத்தானை மாட்டுவது போன்று

எளிதானதாக இருக்கலாம்

அது எனக்கு

நரக நெருப்பு சிந்தும்

அக்னி ஜுவாலை மாதிரியான ஒன்று!

* சோற்றில் கல் கிடந்தால்

எடுத்து வீசிவிட்டு சாப்பிடும்

பழக்கம் போலத்தான் - உன்

எதிரான அணுகுமுறையையும் அனுசரித்து

உன் பின்னால் சுற்றுகிறேன்!

* தன்னம்பிக்கையென்ற

அந்த ஒப்பற்ற கண்ணாடியின் மேல்

குண்டு விழுந்து விடக் கூடாது

ஏனெனில் —

ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கிற

லட்சிய வெறி நீர்த்து போகுமே!

* நீ என் லட்சியம்!

* ஆகவே தான் சொல்கிறேன்

என்னை நீ சம்மதி

அதுவே எனக்கு வெகுமதி!

— அதிரை.இளையசாகுல், துபாய்.






      Dinamalar
      Follow us