sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு நாளாவது...

* நினைவுப் பேழை

- அது ஒரு

நெருப்புப் பெட்டகம்!

* உ<ள்ளத்தில்

ஓளிந்து ஓடும்

திராவக நதி!

* உருக்கிக் கொண்டேயிருக்கும்

ஒருவித எரிமலை!

* நினைவுப் பேழையில்

நிறைந்திருப்பது

பெரும்பாலும்

நிராசை மட்டுமே!

* ஒடுக்கப்பட்ட ஆசைகள்,

உயிரோடு

புதைக்கப்பட்ட ஜீவசமாதி

நினைவுகள்!

* வெல்லப்படாதவையும்

வெறுக்கப்பட வேண்டியவையும்

உள்ளக்குவியலாய்

உட்கார்ந்திருக்கின்றன!

* நினைவுப் பேழையில்

எந்த மூலையிலும்

இடம்பெறாமல் போய் விடுகிறது

நல்லதும், நன்றியும்!

* சுத்தங்களை எரித்துச்

சுவைத்துவிடும் மனதுக்கு

அசுத்தங்கள் மீது

அப்படி என்ன ஒரு அக்கறை?

* தின்ற சாக்லெட்டின்

காகித கவசம்,

தீர்ந்த நூல்கட்டைத்

தாங்கிய குழல்,

உதிர்ந்த பூவின்

ஒற்றை இதழ் சருகு,

இப்படி —

பயன்படாதவற்றைப்

பாதுக்காக்கும்

குழந்தையின் பாங்கு

பிறவியிலிருந்தே பிடித்துக் கொண்டதா?

* குப்பைகளைப் போற்றுவதில்

குழந்தையாய் இருக்கிறோம்...

குணத்தில்

ஒரு நாளாவது...

வளர்கவி, கோவை.






      Dinamalar
      Follow us