sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 23, 2011

Google News

PUBLISHED ON : அக் 23, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரிசிமரம்!

* நண்டு நடக்கும்

நீரோடையில்

நீந்திக் குளித்த

ஞாபகம்!

* பெரிய ரோட்டில்

பழுதாகி நின்ற

பேருந்தில் படியேறி

விளையாடிய

ஞாபகம்!

* புளிய மரம் ஏறி

பழம் பறித்து

பங்கிட்டு சண்டையிட்ட

ஞாபகம்!

* பனை மரத்தின்

பாதியில் பார்த்திட்ட

கிளி பிடித்து வளர்த்த

ஞாபகம்!

* ஆணொன்று

பெண்ணொன்று என

ஆடும், பசுவும் வளர்த்த

ஞாபகம்!

* ஆலங்கட்டி மழையில்

ஆட்டம் போட்டு

அம்மாவிடம் அடி வாங்கிய

ஞாபகம்!

* எண்ணத் திரையில்

எப்போதாவது

எழுகின்றன ஞாபகங்கள்

பட்டணத்து இரைச்சலில்...

* தேவைகள் அதிகமானதால்

தேடல்கள் அதிகமானது

அவசர உலகில்

அவசர அவஸ்தைகள்!

* காலைக்கடன் கழிக்க

கால்மணி வரிசை

வாளி நீருக்கு

வரிசையோ வரிசை!

* அவசரக் குளியலில்

அவசரப் பயணம்

களைப்பை போக்க ஒளிரும்

எலக்ட்ரான் திரை!

* சாப்ட்வேர்

வலைப் பின்னலில்

சகலமும்

அறியலாம்!

* அருமை மகன்

அருகமர்ந்து கேட்டான்...

'அப்பா... எப்படி இருக்கும்

அரிசி மரம்?'

அனுராதா, சென்னை.






      Dinamalar
      Follow us