PUBLISHED ON : டிச 11, 2011

அ நிறம் | அளவு
கோலப்பா(ர்)வைகள்!
* மார்கழி
கோலமிட்டாய்;
மனதுக்குள்
புள்ளியிட்டாய்!
* கோலத்தை
பார்த்தேன்;
கோணலாக
வேர்த்தேன்!
* எட்டித்தான்
கோலமிடுகிறாய்....
எட்டுவாயாயென
ஏங்க விடுகிறாய்!
* வண்ணக் கோலங்கள்தான்
நீயிட்ட
கோலமும்...
நின்
திருக்கோலமும்!
* கோலத்தால்
கொல்கிறாய்...
கல்யாணக் கோலமிட
மெல்கிறாய்!
* அதிகாலையில்
கோலமிட
அர்த்த ராத்திரியில்
எழுப்புகிறாய்!
* வீதியில்
கோலமிடுகிறாய்...
விதியோடு
ஜாலமாடுகிறாய்!
* மார்கழியில்
மாமழையாய்
கோலமிட்டவளே...
தையிலேனும்
காதலிடு;
கைத் தலத்தைப்
பற்றி விடு!
— ச.பிரசன்னா, சென்னை.
