தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

களவாடிய கள்ளா....

* உளவு பார்த்து

உள்ளே வந்தாய்...

உள்ளத்தைக்

களவாடினாய்!

* கனவுகளில்

முத்தமிட்டு...

காமக் கள்

கனிய வைத்தாய்!

* நனவுகளில்

சீண்டாதிருந்து...

கனவுகளில்

தீயாக்கினாய்!

* காதற் கள்

சுவையளித்து

பேதையுள்

போதையாக்கினாய்!

* நெஞ்சுக்குள்

தீப்பிடித்தும்

கைப்பிடிக்கத்

தாமதிக்கிறாய்!

* காதல் வரம்

கேட்டிருந்தாய்...

வசிப்பதற்கோ

காக்க வைக்கிறாய்!

* கண்ணனாக

லீலையாடி...

கள்வனாக

காணாமல் போகிறாய்!

* களவாடியவனே...

கன்னி பெண்

காதற் கள்ளனே...

பொறுத்தது போதுமடா...

பொறுப்பாகக்

கைப்பிடியடா!

பி.கீர்த்தனா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us