தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : மார் 11, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூன்று மொழிகளில் சமந்தா!

நீ தானே என் பொன் வசந்தம் படத்தை தமிழில், ஜீவா-சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா ஜோடியை வைத்து இயக்கியுள்ள கவுதம் மேனன், அடுத்து, இந்தியிலும் இப்படத்தை இயக்குகிறார். இந்தி பதிப்பிலும் சமந்தா வையே நாயகியாக்கும் கவுதம் மேனன், வளர்ந்து வரும் இந்தி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்.

சி.பொ.,

கோச்சடையானுக்கு எதிர்பார்ப்பு!

அவதார், டின் டின் படங் களைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் உருவாகும் படம், கோச்சடையான். எந்திரனை விட பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமம், 100 கோடி ரூபாயைத் தாண்டும் என்கின்றனர். மேலும், இந்திய சினிமா வர்த்த கத்துக்கு, இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும், உலக சினிமா வல்லுனர்கள் எதிர்பார்க் கின்றனர்.

சினிமா பொன்னையா.

டாப்ஸியை வீழ்த்த ரிச்சா சபதம்!

தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும், ஷேடோ என்ற படத்தில், ரிச்சா தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால், இடையில் டாப்ஸி புகுந்து, அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இதனால், டென்ஷனின் உச்சத்தில் இருக் கும் ரிச்சா, டாப்ஸியை விமர் சித்து, கண்டபடி பேட்டி கொடுத்து வருவதோடு, 'அவரை சினிமாவிலிருந்து விரட்டியடிப்பதே என் முதல் நோக்கம்...' என் றும், 'சொடக்' போட்டு வருகிறார். ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.

எலீசா.

பிரபுதேவா இயக்கத்தில் சித்தார்த்!

எங்கேயும் காதல், வெடி என்ற இரண்டு படங்களும் தோல்வியடைந்த தால், மீண்டும் தமிழில் ஒரு படம் இயக்கி, வெற்றிப்பட இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார் பிரபுதேவா. அதனால், தற்போது, சிறுத்தை படத்தின் இந்தி ரீ-மேக்கான, ரவுடி ரத்தோன் படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, அப்பட வேலைகள் முடிந்ததும், மீண்டும் தமிழுக்கு வருகிறார். அப்படத்தில் நடிக்க, 'கால்ஷீட்' கொடுத்துள்ளார் சித்தார்த்.

சி.பொ.,

ஈகோ இல்லாத சினிமா தோழிகள்!

விக்ரம் நடித்த, தெய்வத்திருமகன் படத்தில் இணைந்து நடித்த அனுஷ்கா - அமலா பால் இருவரும் உயிர்த் தோழிகளாகி விட்டனர். அதனால், ஹரி இயக்கத்தில், தான் நடிக்கும், சிங்கம் -2 படத்திற்கு, இன்னொரு நாயகியை டைரக்டர் தேடி வந்ததை அறிந்து, தானே அமலாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் அனுஷ்கா. ஒரு ஹீரோயினே இன்னொரு ஹீரோயினுக்கு சான்சு வாங்கிக் கொடுத்த இந்த அறிய நிகழ்வை, கோடம்பாக்கமே ஆச்சரியமாக பேசிக்கொண்டிருக்கிறது. உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்.

எலீசா.

கோலிவுட்டுக்கு வந்த பாலிவுட் வில்லன்!

பிரகாஷ்ராஜுக்கு பிறகு பிரசன்னா, நரேன், நந்தா என்று, பல நடிகர்கள் வில்லன்களாக நடித்த போதும், யாரும் பெரிய அளவில் புகழ் பெறவில்லை. அதனால், பாலிவுட்டிலிருந்து வித்யூத் ஜாம்வால் என்றொரு அதிரடி வில்லன் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளார். இவர் தற்போது, விஜய் நடிக்கும், துப்பாக்கி, அஜீத் நடிக்கும், பில்லா-2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

சி.பொ.,


நிர்வாணமாக நடிக்கவும் தயார்!

இந்தியில், ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள மாதவன், இனிமேல் நல்லவனாக மட்டுமின்றி கெட்டவன் ரோலிலும் நடிக்கப் போவதாகக் கூறுகிறார். இதுவரை நல்லவனாக மட்டுமே நடித்து, போர் அடித்து விட்டது என்று சொல்லும் மாதவன், 'கதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக ஓடச் சொன்னாலும் ஓடுவேன். எந்த இமேஜும் எனக்கு தேவையில்லை...' என்கிறார்.

சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us