தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவலைகள் தின்னத் தகுமோ?

* உலக வாழ்க்கை

மகிழ்ந்து களிக்கவா...

கவலைகளில்

வாடித் துடிக்கவா?

* வாழ்க்கை போடும்

சிக்கல் முடிச்சுகள்,

கவலைப்படுவதால்

கழன்று கொள்ளாது!

* எல்லா மனிதரையும்

எதிர் கொள்கிறது

போராட்டங்கள்...

பண ரீதியாய்,

பண்பாட்டு ரீதியாய்,

சொந்தபந்தங்கள் பின்னும்

சூழ்ச்சி வலைகளால்!

* கவலைப்படுவது

நேரத்தை மட்டுமா வீணடிக்கிறது...

தேகத்தையுமல்லவா நோகடிக்கிறது!

* கவலைகள் தீர்வல்ல...

பிரச்னைகளைத் தீர்ப்பதைவிட்டு,

கவலைகள்...

அது பற்றியவனைத் தீர்த்து விடுகிறது!

* கவலைகள்

உயிர்மேயும் வெள்ளாடு...

உடலரிக்கும் கறையான்!

* கவலைகள்

முக அழகை மூர்க்கமாக்குகிறது...

சுமூகத்தை சுட்டெரிக்கிறது

கையாலாகாதவன் என்ற

அவப்பெயரை அளிக்கிறது!

* கவலைப்படுபவர்களை

உலகம்

உதாரண புருஷராக்குவதில்லை...

ஒதுக்கி விடுகிறது!

* கவலை வெள்ளாடு

மேயாமல் காக்கும்

வேலி ஒன்று உண்டு...

கவலைக் கறையானைக்

கருவறுக்கும் மருந்து

கைவசம் உண்டு!

* வெண்ணையை

கையில் வைத்துக் கொண்டு

வேதனைப்படுவானேன்...

கவலை எரிக்கும் நெருப்பு

வாழ்வு காக்கும் கவசம்

வேறென்ன -

சிரிப்பு மட்டும்தானே?

வளர்கவி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us