தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 18, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சந்தானத்தை, 'புக்' செய்த ஹீரோக்கள்!

காமெடி நடிகர் சந்தானத்தின் கால்ஷீட்டுக்கு, கோடம்பாக்கத்தில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால், சில முன்னணி ஹீரோக்கள், தங்கள் படங்களில் தொடர்ச்சி யாக அவரை நடிக்க வைக்க, முன்கூட்டியே, 'புக்' öŒ#து வருகின்றனர். அதோடு, 'சந்தானத்தின், 'கால்ஷீட்' என்னிடம் உள்ளது...' என்று சொல்லி, வழிக்கு வராத முன்னணி படக் கம்பெனிகளையும், தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். ஆக, தற்போது சந்தானத்தின் கால்ஷீட்டுக்கு, ஹீரோக் களையே தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா பொன்னையா.

போலீஸ் 'கெட்- அப்'பில் நமீதா!

விஜயசாந்தி பாணியில், பவானி படத் தில் போலீஸ், 'கெட் - அப்'பில் நடித்த சினேகாவுக்கு, அந்த 'கெட் - அப்' எடுபடவில்லை. ஆனால், இப்போது, நமீதாவுக்கு, போலீஸ் கெட் - அப் அசத்தலாக இருக்கும் என்று அவரை வைத்து படமெடுக்க, ஒரு கன்னட தயாரிப்பாளர் களமிறங்கியுள்ளார். அதற் காக, தெலுங்கில் விஜய சாந்தி நடித்து சூப்பர் ஹிட்டான சில படங்களின் கன்னட உரிமையையும் வாங்கப் போகிறார். இத னால், அடங்கிக் கிடந்த நமீதாவின் மார்க்கெட், மீண்டும் சூடு பிடிக்கிறது. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு!

எலீசா.

அமலாபாலுக்கு சித்தார்த் சிபாரிசு!

அசின், இந்தியில் கொடி நாட்டியதில் இருந்தே, அத்தனை கேரளத்து நடிகைகளுக்கும், இந்தி சினிமா ஆசை தலை தூக்கியுள்ளது. அந்த வகையில், தமிழில், தான் நடித்துள்ள, காதலில் சொதப்புவது எப்படி? படம், இந்திக்கு ரீ - மேக் ஆவதால், இந்தி பதிப்பிலும் நடித்து விட, முயற்சி எடுத்து வருகிறார் அமலாபால். இந்திக்காக, பாடல் காட்சிகளில் கிளாமர் புகுத்துவதை அறிந்து, அதற்கு முழு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால், தன் சார்பில் அவருக்கு சிபாரிசு செய்து வருகிறார் சித்தார்த். கண்டதை கொண்டு கரை ஏற வேண்டும்!

எலீசா.

முகம் காட்டாமல் ஒரு டூயட்!

பொதுவாக எந்த காட்சியாக இருந்தாலும் நடிகர் - நடிகையரின் முழு உருவத்தையும் பிரேமில் காட்டுவர். ஆனால், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில், ஒரு டூயட் பாடலை, தலையையே காட்டாமல், கழுத்துக்கு கீழ் மட்டும் படமாக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் சண்முகராஜ். உலக அளவில், இதுவரை யாருமே செய்யாத முயற்சி இது என்று சொல்லும் அவர், முகத்தை காட்டாததால், அவர்களின் முகம் நடிக்க வேண்டியதை, உடம்பு நடிக்கும்படியும் படமாக்கியுள்ளதாகக் கூறுகிறார்.

சி.பொ.,

நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

வில்லு படத்தில் நடித்தபோது, அப்படத்தின் இயக்குனர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்த நயன்தாரா, அவரது பெயரை, தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். ஆனால், இப்போது காதல் கசந்து விட்டதால், பிரபுதேவாவின் பெயரை, தன் கையில் இருந்து நீக்க, சில மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் நயன். பிளாஸ்டிக் சர்ஜரி ஒன்றே இதற்கு சரியான தீர்வு என்று அவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். அதனால், சர்ஜரிக்கு தயாராகி வருகிறார். ஒவ்வொருவரும் தன் தன் பாட்டை தானே அனுபவிக்க வேண்டும்!

எலீசா.

விஷால் - த்ரிஷா கெமிஸ்ட்ரி!

திரு இயக்கிய, தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில், காமெடி கதையில் நடித்த விஷால், இப்போது அதே திரு இயக்கத்தில், சமரன் படத்தில் நடித்து வருகிறார். இதில், த்ரிஷா - சுனைனா இருவரும் எனக்கு ஜோடி என்றாலும், நானும் த்ரிஷாவும் நடித்த காட்சிகளில், நல்ல கெமிஸ்ட்ரி, 'ஒர்க் - அவுட்' ஆகியுள்ளது என்கிறார் விஷால். காரணம், த்ரிஷா ஏற்கனவே என் தோழி என்பதால், அதிக நெருக்கம் - உருக்கம் காட்டி நடித்தார். அதனால், இதுவரை த்ரிஷா நடித்த படங்களை விட, இந்த படம் இளவட்ட ரசிகர்களுக்கு அதிக பிடித்தமானதாக இருக்கும்...' என் கிறார்.

சி.பொ.,

ஈயை காதலிக்கும் சமந்தா!

மகதீரா தெலுங்கு படத்தை இயக்கிய ராஜமவுலி, இப்போது, நான் ஈ என்ற பெயரில் ஒரு தமிழ் படம் இயக்குகிறார். வில்லனால் அழிக்கப்பட்ட ஒரு ஹீரோ, மறு ஜென்மத்தில், ஈயாக பிறப்பெடுத்து, அவனை பழிவாங்கு வதே இப்படத்தின் கதை. அதோடு, ஈயாக மறுபிறவி எடுத்த ஹீரோ நானிக்கும், நாயகி சமந்தாவுக்கும் காதல் காட்சிகளும் உள்ளதாம். சினிமா வரலாற்றில், இது புதிய முயற்சி என்கிறார் ராஜமவுலி.

சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us