PUBLISHED ON : ஏப் 08, 2012

அ நிறம் | அளவு
நீ இல்லாத வாழ்க்கை!
* விரும்பியபடி வாழ்க்கை
இங்கு
சிலருக்கு மட்டுமே
அமைகிறது - பலருக்கு
விதியின் விருப்பப்படியே
நடக்கிறது!
* காயம் தந்த
உன்னையும்
நேசிக்க கற்றுத் தந்து...
நீ தந்த
சோகத்திலும்
சுகம் காணும்
பக்குவம் தந்திருக்கிறது
காலம்!
* நீ இல்லாத
வாழ்க்கை
பெருஞ் சுமையாய்
கனக்கிறது!
* மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை,
எங்கே மனம்
மறக்கிறது!
* காயத்தையும்...
சோகத்தையும்...
உள்ளுக்குள் சுமந்து
கொண்டு...
உதடுகளால்
புன்னகைத்துக் கொண்டே தான்
வாழ வேண்டியிருக்கிறது
என்ன செய்வது?
— செந்தலை நெப்போலியன், சென்னை.
