தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை - என்று வரும் !

கவிதைச் சோலை - என்று வரும் !

கவிதைச் சோலை - என்று வரும் !


PUBLISHED ON : டிச 19, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வழங்கப்பட்ட

வாழ்நாளை நினைக்காமல்...

சந்ததிகளுக்காகவே

அதை —

சந்தனமாய் தேய்த்து...

அந்திமத்தை எட்டிய

அப்பாவிகள்!

*விருப்பங்களை

மறுதலித்த பிள்ளைகள்...

வேண்டுகோள்களைப்

புறக்கணிக்கும் மருமகள்களின்

உதாசீனங்களில் ஒடிந்து

<உயிர் ஒழுக

மீந்துபோன மிச்சங்கள்!

*கொடுக்கும் அறிவுரைகட்கும்

கொட்டும் அன்பிற்கும்

சந்தேகம் ஒன்றே மிஞ்ச

அங்கீகாரம் பெறமுடியாத

அவலத்தின் குறியீடுகள்!

*பென்ஷன் தேதிகளில்

பெறப்படும் பணத்துக்காக...

விசாரிப்புகள் தேடிவரும்

வேதனையின்

விலாசங்கள்!

*மாத்திரைகளின்

வட்டச் சக்கரத்தேர் உதவியால்...

உயிரை உட்கார வைத்து

வலம் வந்துக் கொண்டிருக்கும்

வயோதிகச் சாரதிகள்!

*மருந்துகளின்

மயக்கும்

ஆல்கஹால் கரைசல் போதையில்

கவலை மறக்கும்

காலத்தின் மிச்சங்கள்!

*இந்த —

வயோதிகர்களை

ஜடமாய் பார்க்கும்

காலம் மாறி —

சக மனிதராய் நேசிக்கும் பக்குவம்

இளமை இறுமாப்புக்கு

என்று வரும்?

— க.ராஜேஸ்வரி, உடுமலைப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us