தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : டிச 19, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பகுதிநேர நடிகர்கள் நடித்த சிங்கப்பூர் படம் !

சிங்கப்பூர் வாழ் தமிழரான டி.டி.தவமணி இயக்கியுள்ள படம், 'சிங்கையில் குரு÷க்ஷத்திரம்!' சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவ அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ள அவர், அங்கு முழுநேர நடிகர்கள் யாரும் இல்லாததால், பகலில் அலுவலக வேலைக்குச் சென்று, இரவில் மட்டுமே நடிக்கும் பகுதி நேர நடிகர்களைக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். இவர், 'தீக்குச்சி' என்ற விருது படத்தையும் இயக்கியவர்.          — சினிமா பொன்னையா.

அதிர்ச்சயில் தமன்னா !

நடித்த படங்கள் வெற்றியடைந்து வரும்போதே பட வாய்ப்பு குறைந்து விட்டதால், அதிர்ச்சியில் இருக்கிறார் தமன்னா. இதனால், படங்களை அதிகப்படுத்த, பிரபலமில்லாத சில தெலுங்கு நடிகர்களின் படங்களையும் கைப்பற்றியுள்ளார். அதில், தற்போது தமிழில், நானும், என் காதலும் படத்தில் நடித்துள்ள ஆனந்தின் படமும் ஒன்று. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று!

—  எலீசா.

யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்

பழைய ஞாபகத்தில் யாராவது சிம்புவை, சிம்பு என்று அழைத்தால் அவர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஆனால், எஸ்.டி.ஆர்., என்றால், எகிறி குதித்து ஓடி வருகிறார். அதுமட்டுமின்றி, தனக்கு யாராவது போன் செய்தால், ரிசீவரை கையில் எடுத்ததும், 'யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்., பேசுறேன்...' என்று தன் புதிய பெயரை சொல்லி, பேசத் துவங்குகிறார்.

—  சி.பொ.

உஷார் காமெடியன் சந்தானம் !

தமிழில் பிசியாக நடித்து வரும் சந்தானம், ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். அதோடு, தெலுங்கு, கன்னடத்தில் நடிக்கவும் சான்ஸ் தேடுகிறார். 'தமிழில் பிசியாக இருக்கும் போது, எதற்கு மாற்று மொழிப் படம்?' என்று அவரைக் கேட்டால், 'சினிமா மார்க்கெட் என்பது நிலையானதல்ல. ஒரு மொழி, சரிவை கொடுக்கும் போது, இன்னொரு மொழி, தாங்கிப் பிடித்துக் கொள்ளும். அதனால்தான், பல மொழிப் படங்களிலும் நடிக்கிறேன்...' என்கிறார்.

—  சி.பொ.,

சசியின் கமர்ஷியல் படையல் !

'பூ' படத்தின் தோல்வி, டைரக்டர் சசியையும் கமர்ஷியல் இயக்குரனாக்கியுள்ளது. அடுத்து, பரத்தை வைத்து அவர் இயக்கும், '555' முழு கமர்ஷியல் படையலாக உருவாகிறது. கவர்ச்சி, ஆக்ஷன், காமெடி என மூன்றும் கலந்த கலவையாக கதையை ரெடி பண்ணியிருப்பதாக சொல்கிறார் சசி.

—  சி.பொ.,

சீதை வேடத்தில் நயன்தாரா !

தமிழில் தான் இயக்கும் படங்களில் கூட, நயன்தாராவுக்கு சான்சு கொடுக்கவில்லை பிரபுதேவா. ஆனால், ஒரு தெலுங்குப்பட இயக்குனர் தன் படத்தில் நயனுக்கு சீதை கதாபாத்திரம் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விஷயம் இப்போது வெளியில் தெரிந்தால், சர்ச்சை எழும் என்பதால், நயன்தாரா, சீதை ரோலில் நடிப்பதை சீக்ரெட்டாக வைத்துள்ளனர். பயிர் கிடைத்தால் ஆச்சு; களை கிடைத்தால் போச்சு!  —  எலீசா.

அனுஷ்கா நடத்தும் விழிப்புணர்வு  முகாம் !

நடிகர் கமலஹாசன் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் எய்ட்ஸ் நோய் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது போல், நடிகை அனுஷ்காவும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய முகாம் நடத்தி வருகிறார். மேலும், யாராவது எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு சம்பந்தமான படம் எடுத்தால், அதில் கூடுதல் அக்கறையுடன் தான் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

— சினிமா பொன்னையா.   

ஷங்கரின், '3 இடியட்ஸ்' படத்தில், இந்தியில் கரீனா கபூர் நடித்த ரோலில் நடிக்கிறார்  இலியானா. ஆனால், இப்படத்தை இன்னும் ஒருமுறை கூட பார்க்கவில்லை என்று சொல்கிறார் இலியானா. இனிமேலும் பார்க்கப்  போவதில்லையாம். கரீனாவின் நடிப்பு சாயல் தன்னை ஒட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இந்தக் கட்டுப்பாட்டை தான் கடை பிடிப்பதாகவும் விளக்கம் அளிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us