தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை! - வா வாழ்ந்து பார்க்கலாம்!

கவிதைச்சோலை! - வா வாழ்ந்து பார்க்கலாம்!

கவிதைச்சோலை! - வா வாழ்ந்து பார்க்கலாம்!


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கை அழகான கவிதை

வாசிக்கவும் செய்யலாம்

கசக்கி துார

வீசவும் செய்யலாம்!

உயிர் சுழற்சி

காமம் சம்பந்தப்பட்டது

காமம் மனம் சம்பந்தப்பட்டது!

அடுத்தவனின் மரணம்

தரும் பயம்

வாழ்க்கையை சொல்லித் தரும்!

பயந்த மனம்

இறந்த கால நினைவுகளில்

ஆறுதல் தேடும்

எதிர்கால கனவில்

ஒளிந்து கொள்ள பார்க்கும்

நிகழ் காலம் மட்டும்

எட்டிக்காயாய்...

தன்னை பதிவு செய்து கொள்ளும்

போராட்டத்தில்

பல முகங்கள் சூடி

தான் தொலைந்து போன

பரிதாபம்!

வீணான மிச்சங்கள் கூட

சில உயிர்களுக்கு

உணவாகும்

வீணாய் முடங்கிக் கிடப்பவன்

தனக்கே சுமையாவான்!

முட்டி, முட்டி ஓட்டை

உடைத்துத்தான்

கோழி குஞ்சு கூட

வெளிக்காற்றை சுவாசிக்கிறது!

உன் வாழ்க்கை

உன் முன்னே

வாழ்க்கை அழகான கவிதை

வாசிக்கவும் செய்யலாம்

கசக்கி துார

வீசவும் செய்யலாம்!

கடைசி நாளில்

சிலரின் கண்ணீர் துளிகள்

தான் வாழ்ந்த நாளில்

நாம் சேர்த்து வைத்த சொத்து

வா மனிதனாய்

வாழ்ந்து பார்க்கலாம்!

எஸ்.ஏ. சரவணக்குமார்,

சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us