PUBLISHED ON : நவ 26, 2023

அ நிறம் | அளவு
மல்லிகை பூ
தீபம் ஏற்றி
மணக்கும் மாலைகளாக்க
மனித குணங்கள் வளர்த்திடுவோம்!
மகிழம்பூ
தீபம் ஏற்றி
மகிழ்ச்சி மலர்களாக்க
மகளிர் மனங்கள் வளர்த்திடுவோம்!
அல்லி பூ
தீபம் ஏற்றி
அழகு பூங்காக்களாக்க
அன்பு உள்ளங்கள் வளர்த்திடுவோம்!
ரோஜா பூ
தீபம் ஏற்றி
ஜோராய் ஜொலிக்க
சோலை வனங்கள் வளர்த்திடுவோம்!
தாமரைப்பூ
தீபம் ஏற்றி
தாவர தோட்டங்களாக்க
தங்க கரங்கள் வளர்த்திடுவோம்!
ஆவாரம் பூ
தீபம் ஏற்றி
அடர் வனங்களாக்க
ஆசை நெஞ்சங்கள் வளர்த்திடுவோம்!
அத்திப்பூ
தீபம் ஏற்றி
அகிலம் அழகாக்க
அகில் மரங்கள் வளர்த்திடுவோம்!
பூவரசம்பூ
தீபம் ஏற்றி
பூ பூக்கும் சோலைகளாக்க
புள்ளின கூட்டம் வளர்த்திடுவோம்!
தாழம்பூ
தீபம் ஏற்றி
தாழை தடாகங்களாக்க
தன்னார்வ எண்ணம் வளர்த்திடுவோம்!
புன்னகைப்பூ
தீபம் ஏற்றி
புத்தம் புது பூமி படைக்க
நித்தம் ஒரு தீபம் வளர்த்திடுவோம்!
— க. அழகர்சாமி, கொச்சி.
