PUBLISHED ON : மே 23, 2021

அ நிறம் | அளவு
மருத்துவராவதே அதிகளவில் பணம் சம்பாதிக்க தான் என்ற கருத்து கொண்டவர்கள் மத்தியில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, டாக்டர் மோகன குமார் என்பவர், முற்றிலும் மாறுபட்டிருக்கிறார்.
மகன், மருத்துவ பட்டம் பெற்றபோது, 'உன் படிப்பு, ஏழைகளுக்கு உதவ வேண்டும். எனவே, கிராமங்களுக்கு சென்று ஏழைகளுக்கு சேவை செய்...' என்றார், ஆசிரியரான அவரது அப்பா.
கடந்த, 1976ல், மைசூர் மருத்துவ கல்லுாரியில், பட்டம் பெற்ற பின், அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, கர்நாடகாவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, சேவை செய்து வருகிறார், டாக்டர் மோகன குமார்.
இவர் தங்கியுள்ள இடத்திலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று, இலவசமாக மருத்துவம் பார்ப்பதுடன், மருந்துக்கான பணத்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்.
ஜோல்னாபையன்
