தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அலுவலகத்தில், உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்!

அலுவலகத்தில், உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்!

அலுவலகத்தில், உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அலுவலகத்தில், ஒரு நாளில், எட்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கிறோம். இதனால், உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அலுவலகத்தில் ஆரோக்கியத்தை காக்க உதவும் சில வழிமுறைகள்:

* கம்ப்யூட்டர் திரையிலிருந்து, 20 - 40 அங்குலம் தொலைவில் அமர்ந்து வேலை பார்ப்பது நல்லது.

20 நிமிடங்களுக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் திரையிலிருந்து பார்வையை எடுத்து, 20 விநாடிகள் கண்களை மூடி, ஓய்வெடுக்க வேண்டும். நாற்காலி, நம் கீழ் முதுகை தாங்கும் வகையில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்

* அடிக்கடி, கைகளுக்கான சில எளிய பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால், கைகள், தோள்பட்டை வலுவாகும்

* அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். இதனால், புத்துணர்ச்சி கிடைக்கும்

* அதேபோல், அலுவலகத்தில் அதிக அளவில், காபி, டீ அருந்துவதும் தவறானதாகும். இருவேளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்

* மதிய உணவை சரியான நேரத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

* வேலை பார்க்கும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, சூரிய வெளிச்சத்தையோ, மரத்தையோ பார்க்கலாம்

* நீங்கள் வேலை செய்யும்போது, மேஜை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். அதே சமயம், பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலை பயன்படுத்தலாம்

* அலுவலகத்தில் வேலை செய்யும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தலையை இடது, வலதுபுறமாகவும், மேலும், கீழுமாகவும் அசைக்க வேண்டும். இதனால், கழுத்து எலும்புகள் வலுப்பெறும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us