
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'புரசல வெங்கட சிந்து யார்?' என்று கேட்டால், யாருக்கும் தெரியாது. ஆனால், 'பி.வி.சிந்து யார்?' என்று கேட்டால், உடனே, 'பேட்மின்டன்' வீராங்கனை, 'தங்க மங்கை' என்று கூறி விடுவர். சிறு வயதிலிருந்தே, மகளுக்கு முழு ஊக்கமளித்தனர், பெற்றோர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள விளையாட்டு அகாடமிக்கு, தந்தை அழைத்துச் செல்வார். தினமும், 60 கி.மீ., பயணித்து, பயிற்சி பெற்று வந்தார், சிந்து.
தன், 8வது வயதில் ஆரம்பித்த விளையாட்டு ஆர்வம், 24 வயதிலும் தொடர்கிறது. தினமும், அதிகாலை, 3:30 மணியில் இருந்து, தொடர்ந்து, ஏழு மணி நேரம் பெற்ற பயிற்சியின் பலன் தான், 'பேட்மின்டன்' போட்டியில், தங்க மங்கை ஆனார்.
— ஜோல்னாபையன்.