டூர் செல்லும் முன், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
டூர் செல்லும் முன், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
PUBLISHED ON : ஏப் 09, 2023

* பக்கத்து வீட்டு தோழியிடம், உங்கள் வீட்டு வாசல் விளக்கை, தினமும் மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவில் அணைக்க சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள்
* வேட்டி ஒன்றை பால்கனியில் விரித்து காயப் போடுங்கள். வீட்டில் ஆள் இருப்பதாக நினைத்து, பகல் திருடர்கள், வர மாட்டார்கள்
* 'காஸ்' ஸ்டவ்வின் ரெகுலேட்டரை கழற்றி, சிலிண்டரின் வாயை மூடி, காற்றோட்டமான இடத்தில் வைத்து விட்டால், 'டூரை' நிம்மதியாக அனுபவிக்கலாம்
* தற்சமயம், கண்காணிப்பு கேமரா புழக்கத்தில் உள்ளதால், வாசலில் அதைப் பொருத்தி, மொபைல் போன் மூலம் பார்க்கும் வசதியை, 'டவுண்லோடு' செய்து கொள்ளுங்கள்
* 'டூர்' கிளம்பும் முன், 15 நிமிடங்கள் ஒதுக்கி, கிச்சன் முதல் வராண்டா வரை, விளக்கு, மின்விசிறி போன்றவை அணைக்கப்பட்டுள்ளதா, வைபை, கணினி சுவிட்ச் ஆப் பண்ணியாச்சா, 'ஷெல்ப்' மூடியாச்சா, பிரிஜ் உலர்வா இருக்கிறதா, பைப் மூடியாச்சா, 'ஸிங்க்' துவாரங்கள் மூடியிருக்கிறதா என எல்லாவற்றையும் சரிபார்த்து, கிளம்புங்கள்
* நீங்கள், 'டூர்' போகப் போவதை, 'பேஸ்புக், டுவிட்டரில்' பதிவேற்றம் செய்ய வேண்டாம்.
