PUBLISHED ON : ஜூன் 18, 2023

கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த, 'செலாட்டோ' என்ற நிறுவனம், 'பியாகுயா' என்ற பெயரில், சமீபத்தில் ஒரு ஐஸ்க்ரீம் தயாரித்துள்ளது. இதில் அப்படி என்ன விசேஷம் என கேட்கிறீர்களா... இதன் விலை தான் விசேஷம். ஒரு கப் ஐஸ்க்ரீம் விலை, 5.23 லட்சம் ரூபாய்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் அலாபா பகுதியில் மட்டுமே கிடைக்கக் கூடிய, மிக அரிய வெள்ளை காளான் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காளான் விலை மட்டும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய். மேலும், ஒரு வகை புளித்த அரிசியில் தயாராகும், 'காஸ்' என்ற விலை உயர்ந்த மதுபானமும், இதில் சிறிதளவு சேர்க்கப்பட்டுள்ளது. உண்பதற்கு ஏற்ற தங்க துகள்களும் இதில் உள்ளன.
இவை எல்லாம் சேர்ந்ததால் தான், இவ்வளவு அதிகமான விலைக்கு இந்த ஐஸ்க்ரீம் விற்கப்படுகிறது. கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டாகவே இந்த ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக, செலாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
— ஜோல்னாபையன்
