PUBLISHED ON : ஜூன் 18, 2023

வறட்டு இருமல் உள்ளவர்கள், எலுமிச்சை பழச் சாறுடன், சம அளவு தேன் கலந்து அருந்தி வர குணமாகும்.
* ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து, இளநீரில் கலந்து குடித்தால், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி காணாமல் போய் விடும்.
* எலுமிச்சம் பழச்சாறு, புதினா இலை சாறு இரண்டையும் சம அளவு கலந்து, தினமும் இருவேளை, 5 மில்லி சாப்பிட்டு வர, நன்கு பசியெடுக்கும்.
*குளிர், பனிக்காலங்களில் குளித்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து, கை, முகம், கழுத்து பகுதிகளில் பூசுங்கள். நாள் முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதோடு, வறட்டுத்தன்மை இருக்காது.
* தினமும் எலுமிச்சம் பழச்சாறை அருந்தி வந்தால், வாய் நாற்றம் நீங்கி விடும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் மிளகை மைய அரைத்து சேர்த்து, அதை நெற்றியில் பற்று போட, தலைவலி நீங்கி விடும்.
* எலுமிச்சம் பழத்தோலை காலில் அடி பாகம், கை முட்டி, கணுக்கால், முகம் போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால், தடவிய இடங்கள் பளபளப்பதுடன், கருமை மறையும்.
* உளுத்தம் பருப்பை ஊற வைத்து, அதனுடன் எலுமிச்சம் பழச் சாறை விட்டு மைய அரைத்து, சேற்றுப்புண் மீது தடவினால் சரியாகிவிடும்.
தொகுப்பு: ஆர்.கீதா
