
ஆங்கில பட கெட்டப்பில் புலி விஜய்!
புலி படத்தில், ஒரு உலகத்தில் இருந்து, வேறு உலகத்திற்கு விஜய் செல்வது போன்று, கதை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்படத்தில், விஜய் மற்றும் ஸ்ரீதேவி நீல நிற கண்களுடன் நடித்துள்ளனர். இந்த ஒற்றுமையை வைத்து, அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது போன்று கதை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஏற்கனவே வெளியான, ஜான் கார்டர் என்ற, ஆங்கில படத்தை தழுவிய கதை என்று கூறப்படுகிறது. இதற்கு, விஜய் மற்றும் சிம்புதேவன் தரப்பில் இருந்து, இதுவரை எவ்வித மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.
— சினிமா பொன்னையா
விழிப்புணர்வு விளம்பரத்தில் அஜித்!
'தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்...' என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பாபநாசம் படத்தில், தன் மனைவி மற்றும் மகள்கள் என, நான்கு பேர் ஒரு பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கமல். அதோடு, அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சாலைகளில், ஹெல்மெட் அணிந்து, தன் முகத்தை மறைத்தபடி பைக் ஓட்டும் அஜித்தின் புகைப்படம், தற்போது ஹெல்மெட் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை போலீசார் வெளியிட்டுள்ள, 'தலைக்கவசம் கட்டாயம் தேவை!' என்ற விழிப்புணர்வு விளம்பரத்தில், அஜித் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டும் படம் இடம் பெற்றுள்ளது.
— சி.பொ.,
பாய் பிரண்டுகளுக்கு தடை போட்ட காஜல்!
மும்பை நடிகையான காஜல் அகர்வாலுக்கு, பாய் பிரண்டுகள் அதிகம். அதனால், மும்பைக்கு இவர் சென்றாலே, அவர்களுடன் ஊர் சுற்றுவதில் தான், அதிகப்படியான நேரத்தை செலவு செய்கிறார். சில சமயங்களில், அந்த பாய் பிரண்டுகள் காஜலை தேடி படப்பிடிப்பு தளங்களுக்கே வந்து விடுகின்றனர். இதையடுத்து, அவர்கள் அரட்டையில் இறங்கி விட, இயக்குனர்கள் டென்ஷன் ஆகின்றனர். இப்பிரச்னை காரணமாக, சமீபகாலமாக, 'தன் பாய் பிரண்டுகளை படப்பிடிப்பு தளங்களுக்கு, வரக் கூடாது...' என்று தடை போட்டுள்ளார் காஜல். முளையில் கிள்ளாததை முற்றியபின், கோடாரி கொண்டு வெட்ட வேண்டும்!
— எலீசா
அனுஷ்கா படத்தை வாங்க ஆளில்லை௦!
பாகுபலி படத்தின் முதல் பாகத்தில், அனுஷ்காவின் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இந்நிலையில், அனுஷ்கா முக்கிய நாயகியாக நடித்த, ராணி ருத்ரம்மா தேவி படம் திரைக்கு வருகிறது. மேலும், பாகுபலி படத்தின் வெற்றியை முன்வைத்து, இப்படத்தின் விலையை, கடுமையாக உயர்த்தியுள்ளதால், முதலில் படத்தை வாங்க படையெடுத்த வினியோகஸ்தர்கள், தற்போது பின்வாங்குகின்றனர். இதன் காரணமாக, ருத்ரம்மா தேவி படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* கழுகு நடிகையுடன், 'கிசு கிசு'வில் சிக்கிய அந்த மெரினா நடிகர், இப்போது பொது இடங்களில், நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை குறைத்து விட்டார். ஆன போதும், அந்த ஸ்ரீ நடிகை, அவரை தேவையில்லாமல் சந்திப்பது. போனில் கடலை போடுவது என்று தொடர்கிறார். இதனால், மறுபடியும் ஒரு, 'கிசுகிசு'வில் சிக்கிக் கொள்வோமோ என்று நடிகர் உள்ளூர அச்சத்தில் இருக்கிறார்.
* சண்டைக்கோழி நடிகருடன் சகஜமாக பழகி வரும் அகர்வால் நடிகை, இத்தனை நாட்களும், 'அவுட்டோர்'களில் தன் ஓட்டல் அறைக்குள், யாரையும் அனுமதிக்காதவர், சமீபத்தில், அவருடன் ஒரு படத்தில் நடித்ததில் இருந்து, நடிகருக்கு அவ்வப்போது சிறப்பு அழைப்பு விடுத்து வந்தார். இந்த சீக்ரெட் டிஸ்கஷனுக்குப் பின், தன் புதிய படமொன்றில், அம்மணியை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார், சண்டைக்கோழி.
* வம்பு நடிகர் நடித்த படங்களை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருவதால், அவர் நடிக்கும் படங்களில், முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்குகின்றனர். இதனால், மனதொடிந்து போன வம்புக்காரர், சில அம்மணிகளை குறி வைத்து, கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகிறார். அதில், தாரா மற்றும் பப்ளிமாஸ் நடிகைகளின் பெயர் தான், அதிகம் அடிபடுகிறது.
துளிகள்!
* சினிமாவில் கதாநாயகியாவதற்கு முன், ஐந்து ஆண்டுகளாக, தெலுங்கு, 'டிவி' தொடர்களில் நடித்து வந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.
* தன் புதிய படங்களில், காமெடி வேடத்தில் நடிக்க, சந்தானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் சிம்பு.
* அட்லியின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில், முதன் முறையாக, மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
* புதிய படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிக்க, ஒரு பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்துள்ளார் சந்தானம்.
அவ்ளோதான்!